News October 24, 2024
விசிக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைப்பு

விசிகவில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், தற்போதைய மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தமிழக கட்சிகளில், அதிக மாவட்ட செயலாளர்கள் கொண்ட கட்சி இதுவாகும். இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் 3 வாரங்களில் முடிக்கப்பட உள்ளன.
Similar News
News November 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 8, ஐப்பசி 22 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 07:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News November 8, 2025
இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்போம்: CPM

வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு உள்ளதாக, CPM அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்துவது என்ற ஒரு அம்சத்தில் மட்டும்தான் திமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும், மற்ற விஷயங்களில் மாறுபட்ட கொள்கைகளே உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் CPM போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
ECI அதிகாரிகளுக்கு பிரியங்கா காந்தி பகிரங்க எச்சரிக்கை

பிஹாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ஞானேஷ் குமார் உள்ளிட்ட ECI தலைமை அதிகாரிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களின் வாக்குகளை திருடி துரோகம் இழைத்த ECI அதிகாரிகளை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், நிம்மதியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


