News June 4, 2024
ஒடிஷா சட்டப்பேரவை கலைப்பு!

ஒடிஷா சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் ரகுபர்தாஸ் அறிவித்துள்ளார். ஒடிஷா அமைச்சரவை கூட்டம் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் சற்றுமுன் கூடியது. அக்கூட்டத்தில், சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையை கலைக்கும் பரிந்துரை கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது. ஒடிஷாவில் 77 இடங்களை வென்ற பாஜக, விரைவில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 13, 2025
‘தைராய்டு’ சரியாக இந்த உணவுகளை சாப்பிடுங்க!

பெரும்பாலான பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் தையாய்டு பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த பெரும்பாலானோர் பெரிதும் போராடி வருகின்றனர். தைராய்டு பிரச்னைக்கு மருத்துவம் அவசியம் என்றாலும், அதனை உணவுகள் மூலமாகவும் சரி செய்யலாம். இதனை படிப்படியாக கட்டுப்படுத்த இந்த பதிவில் இருக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை உண்ணுங்கள். இவை உங்கள் தைராய்டு பிரச்னையை குறைக்கலாம். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News September 13, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை EPS, ஜெயலலிதா பாணியில் வெளியிட்டு வருகிறார். கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து பேசுவோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார். அந்த வகையில், திருப்போரூர் தெற்கு ஒன்றிய MGR மன்ற செயலாளர் C.பாஸ்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
News September 13, 2025
முதல் பரப்புரை. விஜய்யின் இன்றைய திட்டம் என்ன?

விஜய், தனது தேர்தல் பரப்புரையை தமிழகத்தின் மத்தியிலுள்ள திருச்சியிலிருந்து இன்று தொடங்குகிறார். இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள பிரத்யேக பிரசார வாகனத்தில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.
*10.35 AM: திருச்சி மரக்கடை MGR சிலை அருகில்.
*1:00 PM: அரியலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில். *4:00 PM: பெரம்பலூர், குன்னம் பஸ் ஸ்டாண்ட் அருகில். *5:00 PM: பெரம்பலூர் வானொலித் திடல்.