News October 6, 2025

அதிருப்தி.. விஜய் முக்கிய முடிவு

image

கரூர் துயர சம்பவம் நடந்து 10 நாள்களாகியும் இதுவரை விஜய்யோ, தவெகவின் 2-ம் கட்ட தலைவர்களோ பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. மேலும், கரூர் செல்வதற்காக விஜய் தரப்பில் இருந்து கோர்ட்டையோ, போலீஸையோ அணுகவில்லை. இதனால், பலியானவர்களின் குடும்பத்தினர் அதிருப்தியில் உள்ளார்களாம். இதனை சரிசெய்ய தொடர் ஆலோசனையில் ஈடுபட்ட விஜய், கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை சட்ட ரீதியாக சந்திப்பதென முடிவெடுத்துள்ளார்.

Similar News

News October 6, 2025

விஜய்யால் மாறும் கூட்டணி கணக்குகள்(1/2)

image

BJP-யின் கூட்டணி ஆட்சி டிமாண்ட், செங்கோட்டையன் போர்க்கொடி போன்றவற்றால் பின்தங்கியிருந்தார் EPS. விஜய் ஆதரவு நிலைப்பாட்டுக்கு பிறகு, களத்தில் தவெகவினர் காட்டும் இணக்கம் EPS-க்கு புது எனர்ஜியை கொடுத்துள்ளது. திமிறும் தேமுதிக, உடைந்த பாமகவை விட விஜய் வருகை, NDA-வை பலப்படுத்தும் என நம்புகிறார். விஜய் பேசுபொருளானதால், அதிமுக உள்கட்சி பிரச்னைகள் மறக்கப்பட்டதும் EPS-க்கு சாதகமே.

News October 6, 2025

விஜய்யால் மாறும் கூட்டணி கணக்குகள் (2/2)

image

விஜய்யை NDA நெருங்குகிறது என்ற ஊகம் கூட்டணி கணக்குகளை மாற்றியுள்ளது. EPS பிடிவாதத்தால் NDA–வில் இருந்து வெளியேறிய TTV, விஜய்யை ஒரு ஆப்ஷனாக முன்னிறுத்தி, பாஜகவிடம் தன் பேர வலிமையை காட்டினார். தற்போது, விஜய்க்கு ஆதரவாக NDA-வில் நடக்கும் நகர்வுகள், TTV–க்கான டிமாண்டை குறைத்துள்ளன. இதனால் தனித்து விடப்படுவோமோ என்ற எச்சரிக்கையால், பரம எதிரி திமுக பக்கம் பார்வையை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

News October 6, 2025

ஒரே நாளில் ₹2,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்டது

image

தங்கம் விலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வெள்ளி விலையும் கடும் உயர்வை சந்தித்து வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று <<17930560>>சவரனுக்கு ₹1400<<>> அதிகரித்த நிலையில், பார் வெள்ளி கிலோ ₹2,000 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது, ஒரு கிராம் வெள்ளி ₹167-க்கும் ஒரு கிலோ ₹1.67 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படியே போனா வெள்ளி வாங்குறது கஷ்டம்தான் போல..!

error: Content is protected !!