News March 19, 2024
அதிருப்தி.. மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா

பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, நிதிஷ் குமாரின் ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்காததால் அதிருப்தியடைந்த பசுபதி பராஸ், இன்று மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Similar News
News August 11, 2025
இந்த டிரெண்டிங் ‘#’ சின்னத்தின் கதை தெரியுமா?

இன்று அனைவருக்கும் தெரிந்த ‘#’ சின்னம் பண்டைய காலங்களில், எடையை (Pound) குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கா, கனடாவில் எண் #1, #2 என கணிதத்தில் குறிப்பிடும் வழக்கமும் இருந்துள்ளது. இதிலுள்ள குறுக்கு கோடுகளினால் இது ‘ஹேஷ்’ என பெயர் பெற்றது. 2007-ல் கிரிஸ் மெஸ்ஸினா என்பவர், டிவிட்டரில் ஒரு Topic-ஐ ஹைலைட் பண்ண பயன்படுத்திய பிறகு, இந்த ‘#’ டிரெண்டிங்கில் இடம் பெற்று விட்டது.
News August 11, 2025
விவாகரத்து பெறுகிறாரா ஹன்சிகா? வைரல் போஸ்ட்!

இன்ஸ்டா Profile-ல் இருந்து கணவருடன் இருக்கும் போட்டோஸை டெலிட் செய்ததில் இருந்து நடிகை ஹன்சிகா விவாகரத்து பெறவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்தான், தனது இன்ஸ்டாவில் ஹன்சிகா, தான் கேட்காத பல பாடங்களை இந்த வருடம் தனக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். ஒருவேளை அவர் விவாகரத்தை தான் சைலெண்டாக சொல்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News August 11, 2025
BREAKING: கூட்டணியை உறுதி செய்த தேமுதிக?

ஜெயலலிதா, பிரேமலதா ஒன்றாக நிற்பதுபோன்ற புகைப்படத்தை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ளது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை பிரேமலதா சந்தித்த நிலையில், இந்த போட்டோ அதிமுக – தேமுதிக கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.