News September 13, 2024

கோவை தொழிலதிபருக்கு அவமரியாதை: ராகுல்

image

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமரியாதை செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேள்வி கேட்டால் என்ன செய்வார்கள் என்பது தற்போது கண்கூடாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய நிலையில், நேற்று அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 21, 2025

ஜி20 மாநாடு இப்படித்தான் நடைபெறும்

image

உலக பொருளாதாரத்தில் 85% பங்களிப்பை செலுத்தும் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஒன்றியங்களின் கூட்டமைப்பே ஜி20. பொருளாதார நிலைத்தன்மைக்காக, நாடுகளுக்குள் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. நடப்பாண்டில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா <<18345371>>ஜி20<<>> உச்சிமாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அமெரிக்கா இம்மாநாட்டை புறக்கணித்துள்ளது.

News November 21, 2025

ஆடம்பர பைக்குகளின் விலை சரசரவென குறைந்தது

image

ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரியர்களுக்காக சூப்பர் ஆஃபர் அறிவிக்கபட்டுள்ளது. கவாஸாகி, தனது சில மாடல் பைக்குகளுக்கு வவுச்சர் அடிப்படையிலான கேஷ்பேக் ஆஃபர்கள் மூலம் ₹55,000 வரை சலுகைகளை வழங்குகிறது. எந்த மாடல் பைக்குக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த சலுகை, நவம்பர் 30 வரை மட்டுமே. SHARE

News November 21, 2025

ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து

image

கரூர் அசம்பாவிதத்தை அடுத்து, Gen Z தலைமுறையின் போராட்டத்தை குறிப்பிட்டு தவெகவின் ஆதவ் அர்ஜுனா X-ல் பதிவிட்டார், பின்னர் நீக்கினார். இதனால், வன்முறையை தூண்டும் வகையில் ஆதவ் பதிவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை HC ரத்து செய்துள்ளது. விசாரணையின்போது, உள்நோக்கத்துடன் இக்கருத்து பதிவிடவில்லை என ஆதவ் தரப்பில் HC-ல் வாதிடப்பட்டது.

error: Content is protected !!