News April 5, 2024
தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

ஸ்பா சென்டர்களில் ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும்தான் மசாஜ் செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொழில்முறையில் மசாஜ் செய்பவர்கள் பாலின பாகுபாடு பார்க்காமல் பணியில் ஈடுபடுவதுதான் வழக்கம். ஆனால், அதனை வேறு நோக்குடன் பார்த்த மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
Similar News
News January 18, 2026
டிரம்ப் வரி விதிப்பைக் கண்டிக்கும் ஐரோப்பிய நாடுகள்

கிரீன்லாந்து ஒப்பந்தத்தை எதிர்த்த நாடுகளுக்கு எதிராக டிரம்ப் விதித்துள்ள வரிகளை ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வருகின்றன. நட்பு நாடுகளின் மீது வரிகளை விதிப்பது தவறு என்று பிரிட்டிஷ் பிரதமர், வரிகள் மூலம் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரான்ஸ் அதிபர் மற்றும் தங்கள் சொந்த, அண்டை நாடுகளின் நலனுக்காகவே எப்போதும் துணை நிற்போம் என்று ஸ்வீடன் பிரதமர் ஆகியோர் கூறியுள்ளார்.
News January 18, 2026
AUS சுற்றுப்பயண மகளிர் ODI மற்றும் T20 அணிகள்

FEB 15-MAR 1 AUS சுற்றுப்பயணத்திற்கான இந்தியா மகளிர் அணி. T20: ஹர்மன்பிரீத் (C), ஸ்மிருதி (VC), ஷபாலி, ரேணுகா, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி, கிராந்தி, சினே, தீப்தி, ரிச்சா(WK), கமலினி(WK), அருந்ததி, அமன்ஜோத், ஜெமிமா, பார்தி, ஸ்ரேயங்கா. ODI: ஹர்மன்பிரீத் (C), ஸ்மிருதி (VC), ஷபாலி, ரேணுகா, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி, கிராந்தி, சினே, தீப்தி, ரிச்சா (WK), கமலினி (WK), காஷ்வீ, அமன்ஜோத், ஜெமிமா, ஹர்லீன்.
News January 18, 2026
ஜனவரி 18: வரலாற்றில் இன்று

*1896-எக்ஸ்ரே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது. *1941-இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் படைகள் இத்தாலிய கிழக்கு ஆப்பிரிக்காவில் போரை தொடங்கியது. *1948-மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மகாத்மா காந்தி தொடங்கிய 121 மணி நேர உண்ணாவிரதத்தை ஜனவரி 18 அன்று முடித்தார். * 1999-பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென்னுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு.


