News August 14, 2024
வினேஷ் போகத் மனு தள்ளுபடி

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனுவை, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் (50 KG) மல்யுத்தத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கப்பட்டார். இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தகுதி நீக்கப்பட்டது சரிதான் என தீர்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 7, 2025
வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழி பேச வேண்டும்: நிர்மலா

உள்ளூர் மொழி தெரியாத ஊழியர்களால் வங்கிகளில் சில பிரச்னை ஏற்படுவதை பார்த்துள்ளோம். இந்நிலையில், வங்கி ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று FM நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். வாடிக்கையாளரை புரிந்து கொள்ள உள்ளூர் மொழி பேசுவது அவசியம் என்று கூறியுள்ள அவர், குறைந்தபட்சம் கிளை மேனேஜராவது வட்டார மொழி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
T20 WC: 5 நகரங்களை குறிவைக்கும் BCCI!

அடுத்த ஆண்டு T20 உலகக் கோப்பை, இந்தியா & இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் போட்டிகளை நடத்த, 5 நகரங்கள், அதாவது அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை & மும்பை ஆகிய நகரங்களை BCCI தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இறுதி போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இத்தொடர் பிப்ரவரி 7, 2026-ல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 7, 2025
கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்து: CM ஸ்டாலின்

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் X தள பதிவில், பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும், பன்முகத்தன்மை மிக்க நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டுள்ள கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்து என வாழ்த்தியுள்ளார்.


