News May 24, 2024
இனி ரேஷன் கடை ஊழியர்கள் டிஸ்மிஸ்?

ரேஷன் கடைகளில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருள்கள் கிடைக்கவில்லை . இந்நிலையில், கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது அடிக்கடி புகாருக்கு உள்ளாகும் ஊழியர்களின் விபரம் அடங்கிய பட்டியல் தயாரித்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், முறைகேடுகளுக்கு துணைப்போகும் ரேஷன் கடை ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்யவும் அரசு முடிவு எடுத்துள்ளது.
Similar News
News April 6, 2026
தேர்தலுக்கு புதிய வியூகத்தை வகுத்த பாஜக!

TN தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் தலைவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கிய நிலையில், பாஜக புதிய வியூகத்தை வகுத்துள்ளது. பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ’விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில் விவசாயிகளை சந்தித்து, PM-KISAN திட்டத்தில் ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படுவது, பயிர் காப்பீடு உள்பட பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க பாஜக குழுவை அமைத்துள்ளது.
News April 6, 2026
அதிகமாக டீ, காபி குடிக்கிறீங்களா? எச்சரிக்கை!

ஒருநாளுக்கு 2 முறைக்கும் அதிகமாக டீ, காபி குடிப்பவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். டீ-யில் உள்ள Tanin, காபியில் உள்ள கஃபைன் உடல் இரும்பு சத்தை உறிஞ்சவிடாமல் தடுக்கிறதாம். இதனால் ரத்தசோகை ஏற்படுகிறது. மேலும், High BP, அஜீரண கோளாறு, அல்சர், மூட்டு வலி, இருதய பிரச்னைகள் கூட வரும் என்கின்றனர். ஒருநாளுக்கு எத்தனை கப் டீ/காபி குடிப்பீங்க?
News April 6, 2026
செல்வப்பெருந்தகை வடசென்னை செல்ல கட்டுப்பாடு

திரு.வி.க. நகர் தொகுதியில் பொற்கொடி களமிறங்கிய நிலையில், வட சென்னை முழுவதும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையுடன் செல்வப்பெருந்தகையை தொடர்புபடுத்தியும், திமுகவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறதாம். இதுதொடர்பாக உளவுத்துறை ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால், கொளத்தூர் உள்பட வட சென்னை பகுதிகளில் செல்வப்பெருந்தகை பிரசாரம் செய்ய வேண்டாம் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.


