News August 13, 2024
பதஞ்சலிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

பதஞ்சலி நிறுவனம் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது. மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று ஏற்கெனவே பதஞ்சலிக்கு எதிராக தீர்ப்பு உள்ளது. அதையும் மீறி, அவர்கள் misleading விளம்பரங்கள் வெளியிடுவதாக மனு அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் பதஞ்சலி மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News March 10, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்

சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம், அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. EPS-ஐ நேரில் சந்தித்த அக்கட்சியின் தலைவர் Dr.RV பரதன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார். இக்கட்சி, TN-ல் மத்திய, தென்மாவட்டங்களில் முத்தரையர் சமூகத்தின் கணிசமான வாக்குகளை கொண்டுள்ளது. இதனிடையே, கள்ளர் முன்னேற்ற சங்கம் அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், திருச்சி சரவணத்தேவர் மழவராயர், EPS-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
News March 10, 2026
நயினாருடன் பனிப்போரா? பாஜகவில் என்ன நடக்கிறது?

சமீபத்தில் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்துவிட்டு அந்த போட்டோக்களை X-ல் நயினார் பகிர்ந்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த கே.பி.ராமலிங்கம், ஆன்மிகத்தில் மட்டுமல்ல தொண்டர்களின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இருவருக்குள்ளும் பனிப்போர் உண்டாகியுள்ளதா என SM-ல் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த KP ராமலிங்கம், தங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை என கூறியுள்ளார்.
News March 10, 2026
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்: சு.சுவாமி

தொடர்ந்து 3-வது முறையாக PM நாற்காலியில் அமர்ந்துள்ள மோடி, USA அதிபர் டிரம்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என BJP மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எனக்கு தெரிந்த தகவல்களை தற்போது வரை நான் வெளியிடவில்லை; அப்படி தான் வெளியிட்டால் PM மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய அவை வழிவகுக்கும் என எச்சரிக்கும் தொனியில் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.


