News August 7, 2024

அனிதா ராதாகிருஷ்ணன் மனு தள்ளுபடி

image

அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 2002-2006 வரையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ₹4.90 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து, அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 23, 2025

BREAKING: சீமான் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

image

புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் <<18367239>>நிருபரை ஒருமையில் பேசிய விவகாரத்தில்<<>> சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், தாக்குதல், தகாத வார்த்தையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சீமான் தகாத வார்த்தையில் பேசிய நிலையில், அந்த நிருபர் மீது நாதகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

6 ஆண்டுகளுக்கு பின் சதம்… முத்துசாமியின் சாதனை

image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், இன்று SA பேட்ஸ்மேன் முத்துசாமி, தனது முதல் சதத்தை(109) அடித்தார். இதன்மூலம், 6 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவில் 7 (அ) அதற்கு அடுத்த நிலையில் இறங்கி சதம் அடித்த முதல் SA வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடைசியாக 2019-ல் டி காக் இந்தியாவில் சதம் அடித்தார். மேலும், இந்தியா, பாக்., வ.தேசம் நாடுகளில் 50+ ரன்கள் குவித்த 4-வது SA வீரராகவும் முத்துசாமி சாதித்துள்ளார்.

News November 23, 2025

SIR ஒரு திட்டமிட்ட சதி: ராகுல் காந்தி

image

SIR என்பது ஒரு சீர்திருத்தம் அல்ல, அது ஒரு திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். 16 BLO-க்கள் உயிரிழந்ததை X-ல் சுட்டிக்காட்டி, SIR என்ற திட்டமிட்ட சதியால் வாக்காளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், தேவையற்ற அழுத்தத்தால் BLO-க்கள் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார். SIR-ன் நோக்கம் சரியாக இருந்திருந்தால் EC போதுமான அவகாசம் எடுத்து அதை செயல்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!