News August 7, 2024
காங்., கட்சியில் இருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இன்று கைதான அஸ்வத்தாமன், காங்., கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை -குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கட்சிக்கு அவப்பெயரும் உண்டாகும் விதத்திலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் தொடர்புக் கொள்ளக் கூடாது என காங்., கட்சி எச்சரித்துள்ளது.
Similar News
News December 7, 2025
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

கிரேக்கத்தின் கிரீட் தீவு அருகே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய பயன்படுத்தப்படும் முக்கிய நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. இந்நிலையில், இந்த படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 7, 2025
அறிவாலயம் சுடுகாடு மாதிரி: நாஞ்சில் சம்பத்

திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும், தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், ஆனால், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் லேப்டாப் வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
சற்றுமுன்: விலை தாறுமாறாக குறைந்தது

கனமழை காரணமாக கடந்த வாரம் முதல் தொடர்ந்து காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று ₹10 முதல் ₹20 வரை குறைந்துள்ளது. ₹70-க்கு விற்பனையான தக்காளி ₹40-க்கும், வெங்காயம் ₹20-க்கும், உருளைக்கிழக்கு ₹40-க்கும், குடைமிளகாய் ₹40-க்கும், பாகற்காய் ₹35-க்கும், கேரட் ₹50-க்கும், முள்ளங்கி ₹25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளன.


