News April 26, 2025
டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினம் கண்டுபிடிப்பு..!

பிரேசில் நாட்டில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எறும்பின் புதைபடிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Hell Ant எனப்படும் இந்த வகை எறும்பு, ஹைடோமைர்மெசினே துணைக் குடும்பத்தைச் சேர்ந்ததாம். சுண்ணாம்பு கல்லில் இருந்து இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எறும்புகளின் பரிணாம வளர்ச்சியை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Similar News
News April 26, 2025
16 ஆண்டுகளில் CSK-வின் மோசமான ரெக்கார்ட்!

நடப்பு IPL தொடர் CSK-விற்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நேற்றைய தோல்வியுடன் கிட்டத்தட்ட CSK-வின் ப்ளே ஆப் கனவும் கலைந்து விட்டது. 16 ஆண்டுகால CSK வரலாற்றில், தொடர்ச்சியாக 2 முறை ப்ளே ஆப்பிற்கு செல்ல முடியாமல், CSK வெளியேறுவது இதுவே முதல் முறை. இந்த மோசமான தோல்விக்கு என்ன காரணம் என நினைக்குறீங்க?
News April 26, 2025
எல்லையில் துப்பாக்கி சூடு… அதிகரித்த பதற்றம்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 26, 2025
அதிமுக கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள்: இபிஎஸ்

அதிமுக கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள் இணையக்கூடும் என்று இபிஎஸ் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய இபிஎஸ், பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணி அமைத்து இருப்பதாகவும், இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமையும் என்றும் கூறினார். ஆனால் அக்கட்சிகள் பெயரை அவர் கூறவில்லை. எந்த கட்சிகள் சேரும்? உங்கள் கருத்து என்ன?