News July 30, 2024
3ஆவது பேட்டரை கண்டறியுங்கள்: மிதாலி ராஜ்

இந்திய மகளிர் அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை விரைவில் கண்டறிவது அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ஷஃபாலியும், ஸ்மிருதி மந்தனாவும் சிறப்பான தொடக்கத்தை வழங்குவதாகத் தெரிவித்த அவர், 3ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடிய வீராங்கனையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்றார்.
Similar News
News August 16, 2025
750 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் தாய்மொழி தகுதித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News August 16, 2025
அதிமுகவில் இணையும் OPS? மழுப்பி மாட்டிய அமைச்சர்..

OPS வேண்டாம் என ஒற்றைக் காலில் நிற்கிறார் இபிஎஸ். BJP-யோ இருவரையும் இணைக்க முயற்சி செய்து வருவதாக பேசப்பட்டது. இதுகுறித்து RB.உதயகுமாரிடம் கேட்டபோது, “சிதறு தேங்காயை போல சிதறிய காலமும் உண்டு, பிறகு சேர்ந்து ஆட்சியமைத்த காலமும் உண்டு. எனக்கு ஜோசியம் தெரியாது. Wait and see” என மழுப்பிவிட்டு நகர்ந்தார். இதனால் OPS விவகாரத்தில் BJP-யின் பேச்சை EPS கேட்டுவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
News August 16, 2025
இப்படியே போனா எப்பிடி? கட்டணத்தை உயர்த்திய SWIGGY..

ஆன்லைன் டெலிவரி செயலிகளில் உணவின் விலை அதிகமாக இருப்பதாக பலர் புலம்புகின்றனர். இந்நிலையில் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹2 உயர்த்தியுள்ளது SWIGGY. 2023-ல் ₹2-ஆக இருந்த கட்டணத்தை 2024-ல் ₹10-ஆக உயர்த்தி, தற்போது ₹14 வரை உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகளில் பிளாட்ஃபார்ம் கட்டணம் மட்டுமே 600% உயர்ந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உணவு டெலிவரி செய்யும் செயலியை தெரிந்துகொள்ள வேண்டுமா? <<17424295>>க்ளிக் பண்ணுங்க.<<>>