News April 4, 2025
சைதை துரைசாமி மீது ஒழுங்கு நடவடிக்கையா?

அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவும் சூழலில் சைதை துரைசாமியின் திடீர் அறிக்கை அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. அதிமுக மீண்டும் ஒன்றிணைவது தொடர்பாக அவரது கருத்து கட்சியில் சிலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் வெளிப்பாடே ‘கெஸ்ட் ரோல்’ அரசியல்வாதி என ADMK IT விங் சாடியிருந்தது. இந்நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இபிஎஸ்ஸுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 5, 2025
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

டிட்வா புயல் வெள்ளத்தால் இலங்கையில் இதுவரை 465 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பவுள்ளது. இதன்பொருட்டு, இலங்கைக்கு நிவாரண பொருள்களுடன் செல்லும் கப்பலை, நாளை சென்னை துறைமுகத்தில் CM ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கவுள்ளார்.
News December 5, 2025
2-ம் நாளாக ஏற்றம்.. குஷியில் முதலீட்டாளர்கள்

தொடர்ந்து 4 நாள்களாக சரிந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முதல் ஏற்றத்தை கண்டுள்ளன. RBI-ன் <<18475076>>ரெப்போ வட்டி குறைப்பு<<>>, இன்றைய ஏற்றத்திற்கு வலு சேர்த்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்து, 85,712 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 26,186 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
News December 5, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் டிச.10- டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பிற்பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.


