News May 17, 2024
4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தலா 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லை, குமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு 3 குழுக்களும், கோவைக்கு ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
RED ALERT: இங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ரெட் அலர்ட்-ஐ தொடர்ந்து நாளை(நவ.29) கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் எதிரொலியால் நாளை மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரத்திற்கும் IMD ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களுக்கும் விடுமுறை விடப்படுவது குறித்து கலெக்டர்கள் ஆலோசித்து வருகின்றனர். முன்னதாக தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
News November 28, 2025
ஆதாரில் போன் நம்பரை இனி வீட்டிலேயே ஈசியா மாற்றலாம்!

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை மாற்ற, இனி பெரிய க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் வீட்டில் இருந்த படியே மாற்றலாம் என UIDAI அறிவித்துள்ளது. போனில் ‘ஆதார் APP’-ஐ டவுன்லோட் செய்து, அதில் OTP மற்றும் Face Authentication மூலம் போன் ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள நம்பரை மாற்றலாம். அந்த ஆப்பை டவுன்லோட் செய்ய, <
News November 28, 2025
FLASH: டிச.4-ல் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்

2 நாள்கள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார். 4-ம் தேதி அன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார். மறுநாள் 23-வது இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக பிரச்னை நீடிக்கும் நிலையில், ரஷ்யா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு புடின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


