News May 10, 2024
மணிசங்கர் ஐயரின் கருத்தை ஏற்கவில்லை: காங்கிரஸ்

பாகிஸ்தான் தொடர்பாக மணிசங்கர் ஐயர் கூறிய கருத்தை ஆதரிக்கவில்லை என காங்கிரஸ்
கட்சி விளக்கமளித்துள்ளது. மணி சங்கர் ஐயரின் சொந்த கருத்துக்கு, காங்கிரஸ் பொறுப்பேற்க முடியாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களிடம் அணு ஆயுதம் இருப்பதை இந்தியா எப்போதும் மறக்கக்கூடாது எனவும் மணி சங்கர் ஐயர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 4, 2026
பாடகர் பென்னி தயாள் அப்பா ஆனார் ❤️❤️

பாடகர் பென்னி தயாள் – கேத்ரின் பிலிப் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. மாடல் அழகியான கேத்ரினை கடந்த 2016-ம் ஆண்டு பென்னி கரம்பிடித்தார். அண்மையில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்த நிலையில், டிச.27-ம் தேதி பெண் குழந்தை பிறந்திருப்பதாக SM பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டில் சிறப்பான ஒன்று கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பென்னி தயாள்.
News January 4, 2026
கலவரத்திற்கு US, இஸ்ரேல் தான் காரணம்: ஈரான் தலைவர்

<<18742311>>ஈரானில்<<>> பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கலவரக்காரர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என அந்நாட்டு தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு US, இஸ்ரேல் தான் காரணம் எனவும், எதிரிகளுக்கு ஆதரவான சிலர் தான் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News January 4, 2026
ராசி பலன்கள் (04.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


