News December 11, 2024
முடங்கியது Microsoft சேவை

Microsoft 365 ஆப்ஸ் மீண்டும் செயலிழந்துள்ளன. Cloud சேவைகளை பயனர்கள் அணுக முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ள Microsoft நிறுவனம், அதுவரை பயனர்கள் Cloud செயலி அல்லாத, Desktop வெர்சனை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. Word, Excel போன்ற Desktop செயலிகள் இயங்குகின்றன.
Similar News
News August 27, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 27)

1908 – புகழ்பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் பிறந்த தினம்
1939 – உலகின் முதல் ஜெட் விமானம் சேவைக்கு தொடங்கியது
1972 – WWE வீரர் கிரேட் காளி பிறந்த தினம்
1979 – இந்தியாவின் தலைமை கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு மறைந்தார்
1991 – மால்டோவா விடுதலை தினம்
2003 – 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வந்தது.
News August 27, 2025
இந்தியாவில் சுசூகி நிறுவனம் ₹70,000 கோடி முதலீடு

ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார்ஸ் அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியாவில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் ‘இ விட்டாரா’ அறிமுக நிகழ்ச்சியில் இதனை அந்நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு லட்சம் கோடி முதலீட்டில் 11 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News August 27, 2025
ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தானில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் இருப்பதால் ஹுண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்கள் மீது ராஜஸ்தானை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். சட்டப்படி பிராண்ட் தூதர்கள் குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களுக்கும் அதில் பொறுப்புள்ளது.