News March 20, 2025
இசைஞானியை வாழ்த்திய இயக்குனர்கள்!

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடியும், இளையராஜாவை அழைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டினார். நாடாளுமன்றத்திலும் அவருக்கு புகழ் சூட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.
Similar News
News July 7, 2025
மாலை 6 மணி வரை முக்கிய செய்திகள்!

➤மேட்டுப்பாளையத்தில்<<16979878>> ரோடு ஷோவில்<<>> பங்கேற்ற இபிஎஸ்
➤<<16979271>>26/11 தாக்குதலில் <<>>பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதி
➤சர்ச்சையை ஏற்படுத்திய <<16975904>>டிரம்பின் வரி<<>> விதிப்பு அறிவிப்பு
➤ <<16977265>>செல்போன் ரீசார்ஜ்<<>> கட்டணத்தை உயர்த்த திட்டம்?
➤ <<16978348>>டெஸ்டில் 367 ரன்களை<<>> குவித்த தென்னாப்பிரிக்க கேப்டன்
News July 7, 2025
பெருங்கவிக்கோ உடல் குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

மூத்த தமிழறிஞரான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி உயிரிழந்த அவரது உடலுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யவும் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், 30 குண்டுகள் முழங்க சேதுராமனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP
News July 7, 2025
2010 முதல் விலையே மாறாது Parle G-யின் ரகசியம் தெரியுமா?

எவ்வளவு விலைவாசி உயர்வுகள் வந்தாலும், Parle G விலை மட்டும் எப்படி விலை உயரவே இல்லை என்ற டவுட் பலருக்கும் உண்டு. விலைக்கு பதிலாக, நைசாக வேறொரு வழியில், விலைவாசி உயர்வை கையாண்டு வருகிறது Parle G நிறுவனம். 2010-ல் ₹5-க்கு 60 கிராம் பிஸ்கட் பாக்கெட் விற்கப்பட்டது. ஆனால், அது 2015-ல் 50 கிராமும், 2018-ல் 38 கிராமும், 2020-ல் 33 கிராமும், தற்போது 30 கிராமும் வழங்கப்படுகிறது. ஆனால் விலை ₹5 தான்.