News April 15, 2025
இயக்குநர் S.S.ஸ்டான்லி உடல் தகனம்

பிரபல இயக்குநரும் திரைப்பட நடிகருமான <<16108100>>S.S.ஸ்டான்லி(58) காலமானார்.<<>> இவரின் மறைவுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின், இன்று மாலை சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர்கள் நாசர், பிரகாஷ், இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் இறுதிவரை இருந்து அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News November 26, 2025
IPL கம்மியா ஆடுங்க.. கிப்ஸ் அட்வைஸ்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணிக்கு ஹெர்ஷல் கிப்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். இனி அடுத்தக்கட்டமாக இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, IPL போட்டிகளை குறைத்துக் கொண்டு அதிக டெஸ்ட்களில் விளையாடுங்கள் என கிப்ஸ் கூறியுள்ளார். ஏற்கெனவே IPL செயல்பாடுகளை வைத்து இந்திய அணிக்கு வீரர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?
News November 26, 2025
கோலிவுட்டில் புது காதல் ஜோடியா?

அண்மையில் வெளியான ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. இதனிடையே, திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் இருவரும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் இருவரும் ஒரே நேரத்தில் ’பைசன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை வைத்து இன்ஸ்டாவில் போஸ்டை போட்டுள்ளனர். இந்த செய்தி தீயாக பரவியதும் பாடலை டெலிட் செய்துவிட்டனர்.
News November 26, 2025
செங்கோட்டையன் முடிவு: OPS தரப்பு நிலைபாடு இதுதான்

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தால், அது அவருடைய அரசியல் சாணக்யத்தனத்தையே காட்டும் என நாஞ்சில் கோலப்பன் கூறியுள்ளார். இதனால் OPS-க்கு பின்னடைவோ, ஏமாற்றமோ கிடையாது என்ற அவர், தவெகவில் KAS இணைந்தால் அது அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் EPS-க்கு தான் பாதிப்பு, அவர்தான் தனித்துவிடப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


