News March 6, 2025

இயக்குநர் பொன்குமாருக்கு திருமணம்

image

சினிமா இயக்குநர் பொன்குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏ.ஆர். முருகதாசிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து, பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான 1947 ஆகஸ்ட் 16 படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் பொன்குமார். அவருக்கும், விவேகா என்பவருக்கும் தென்காசி மாவட்டம் கீழகலங்கலில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து அண்மையில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது.

Similar News

News March 6, 2025

“போலி போட்டோஷூட் அப்பா” கவனம் செலுத்துங்க: இபிஎஸ்

image

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு, திமுக அரசை இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஸ்டாலின் மாடல் ஆட்சியில் யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் துளியும் பாதுகாப்பு இல்லை. முதல்வர் எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க “போலி போட்டோஷூட் அப்பா”வை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

முதியோருக்கு இனி கவலையில்லை

image

ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்கள் வேறு ஒருவரை அனுப்பி பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதி அமலில் உள்ளது. ஆனால், இதற்கு அங்கீகார சான்று பெற வேண்டும். இதற்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க அதிகாரிகள் கால தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்த வசதி <>ரேஷன் இணையதளத்திலேயே<<>> சேர்க்கப்பட்டுள்ளது. இனி, இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2025

டேட்டிங் செயலிகள் மூலம் பழகி 60 பெண்கள் பலாத்காரம்

image

டேட்டிங் செயலிகள் காதல் உறவுகள் மலர உதவுகிறதோ இல்லையோ, காம வெறியர்களுக்கும், மோசடி பேர்வழிகளுக்கும் ரொம்பவே உதவுகிறது. பிரிட்டனில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான 60-க்கு மேற்பட்ட பெண்களை மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சீன இளைஞர் ஜின்ஹவ் சுவா. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரின் போனை சோதித்ததில், சுமார் 1300 ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டறியபட்டுள்ளது. பெண்களே, கவனமாக இருங்க!

error: Content is protected !!