News December 5, 2024

இயக்குனர் K.S.ரவிக்குமாரின் தாயார் காலமானார்

image

பிரபல திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார். நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை ரவிக்குமார் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். தாயாரின் இறுதி சடங்குகள் இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 29, 2025

மீண்டும் PM பதவியை நோக்கி நகரும் மார்க் கார்னி

image

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் அதை நோக்கி PM மார்க் கார்னியின் லிபரல் கட்சி(167) நெருங்கியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 147 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போதைக்கு மீண்டும் கார்னி பிரதமராகும் சூழல் பிரகாசமாக உள்ளது.

News April 29, 2025

செப்.6-ம் தேதி காவலர் நாள்: CM ஸ்டாலின்

image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு அந்த நாளில் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காட்சி நடத்தப்படும் என தெரிவித்த ஸ்டாலின், குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.

News April 29, 2025

இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!