News December 6, 2024

இயக்குநர் ஜெயபாரதி காலமானார்

image

தமிழில் மாற்று சினிமாவை இயக்குவதில் உறுதியாக இருந்த இயக்குநர் ஜெயபாரதி (77) சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. 1979ஆம் ஆண்டு ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் ‘குடிசை’ படத்தை இயக்கினார் ஜெயபாரதி. பின்னர், 2010ஆம் ஆண்டு புத்திரன் படத்தை இயக்கி தமிழக அரசின் விருதுகளை வென்றார்.

Similar News

News January 12, 2026

AI-ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா?

image

மனிதர்களின் கைகளை மீறி போகும் முன் AI-ஐ கட்டுப்படுத்த வேண்டும் என AI நிறுவனங்களை மைக்ரோசாஃப்ட் AI CEO முஸ்தபா சுலைமான் அறிவுறுத்தியுள்ளார். உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை நீங்கள் வழிநடத்த முடியாது. அதனால் தான் மனிதர்களின் மேற்பார்வையில் ‘Super Intelligence’ நோக்கிய பயணம் அமைய வேண்டும் என்கிறோம். எனவே, மனிதர்களுக்கு தீங்கிழைக்காத வகையில் AI-ஐ மேம்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News January 12, 2026

இந்தியாவிற்குள் நுழைய 1,000 பயங்கரவாதிகள் தயார்!

image

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான JeM-ன் தலைவர் மசூத் ஆசார் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஆயிரக்கணக்கான தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தன்னை வலியுறுத்தி வருவதாகவும் மசூத் ஆசார் பேசுகிறார். மேலும், தங்கள் நெட்வொர்க்கின் ஆள்பலத்தை கூறினால் உலகமே நடுங்கும் என்றும் கூறுகிறார்.

News January 12, 2026

ஜனவரி 12: வரலாற்றில் இன்று

image

*தேசிய இளைஞர் நாள். *1863 – விவேகானந்தர் பிறந்தநாள். *1972 – பிரியங்கா காந்தி பிறந்தநாள். *2010 – மத்திய அமெரிக்க நாடான ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1 லட்சம் பேர் உயிரிழந்தனர். **1972 – உலக புகழ்பெற்ற துப்பறியும் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி உயிரிழந்தநாள். *2000 – நாவலர் இரா. நெடுஞ்செழியன் உயிரிழந்தநாள்.

error: Content is protected !!