News September 27, 2025
மீளா துயரில் இயக்குநர் பாரதிராஜா!

<<15986882>>நடிகர் மனோஜ்<<>> மறைவுக்கு பிறகு இயக்குநர் பாரதிராஜா மீளா துயரில் ஆழ்ந்துள்ளதாக அவரது சகோதரர் ஜெயராஜ் உருக்கமாக பேசியுள்ளார். தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர், பணம், புகழ் இருந்தும் தனது மகனை காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வில் பாரதிராஜா தவிப்பதாக கூறியுள்ளார். சில நாள்கள் நினைவாற்றல் பாதிக்கப்பட்டதால் மலேசியாவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Similar News
News January 6, 2026
செங்கை: 8 பேரை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்!

செங்கல்பட்டு, வெடால் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த வெறிநாய் ஒன்று தேவி(50) என்பவரின் காலை கடித்துவிட்டு தப்பியோடியது.இதைத் தொடர்ந்து ரத்தினம் (50), கண்ணப்பன்(55), முனியம்மாள் (60),சீதா 40) உள்ளிட்ட 8பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது. மேலும் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பசு கன்றுகளையும் கடித்துள்ளது. காயமடைந்தோர் இடைக்கழிநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
News January 6, 2026
திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான வழக்கில் அரசின் மேல் முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும் நீதிபதிகள் பரபரப்பு கருத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், மலையில் தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
News January 6, 2026
மோடியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: சுப்பிரமணிய சுவாமி

டிரம்ப்பின் ஆதரவாளராக இருக்கும் மோடி, இந்திய ஜனநாயகத்திற்கும், பாஜகவிற்கும் மிகப்பெரிய ஆபத்தாக உள்ளதாக அக்கட்சியின் Ex MP சுப்பிரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். அதனால், மோடியை PM பதவியில் இருந்து ஓய்வு பெற வைத்து, பாஜகவின் தலைமை ஆலோசனை குழுவில் (Marg Darshan Mandal) அமரச் சொல்வது குறித்து RSS அமைப்பும் பாஜகவின் பொதுக்குழுவும் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து?


