News March 21, 2024
18 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடி மோதல்

அதிமுக இரண்டாம் கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான 17 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழ்நாடு & புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக – திமுக 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், விசிக, சிபிஎம் & சிபிஐ ஆகிய 3 கட்சிகளுடன் அதிமுக தலா 2 தொகுதிகளிலும், அதிமுக – காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், முஸ்லீம் லீக், மதிமுக & கொமதேக ஆகிய 3 கட்சிகளுடன் அதிமுக தலா 1தொகுதியிலும் நேரடியாக மோதவுள்ளது.
Similar News
News August 31, 2025
இபிஎஸ் மகனுடன் சசிகலா சீக்ரெட் மீட்டிங்?

சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, அதிமுக ஒருங்கிணைப்புக்கான குரல் வலுத்துக்கொண்டே வருகிறது. இதில் தீவிரமாக இறங்கியிருக்கும் சசிகலா, அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசிவந்தாராம். ஆனால் EPS எதற்கும் அசைந்துகொடுக்காததால், தற்போது அவரது மகன் மிதுனிடமே பேச்சுவார்த்தையை அவர் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு எதிர்பார்க்கலாமா? உங்கள் கருத்து?
News August 31, 2025
தினமும் ₹50 சேமித்தால், ₹1 லட்சம் தரும் திட்டம்

பணம் சேமிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் சிறந்த வழியாக இருக்கிறது. பெரிய தொகையை சேமிக்க முடியாதவர்கள் இத்திட்டத்தில் தினமும் வெறும் ₹50 சேமித்து, 6.7% வட்டியோடு, 5 ஆண்டுகளில் ₹1 லட்சம் வரை பெறலாம். உங்களால் எவ்வளவு சேமிக்க முடிகிறதோ அதற்கு ஏற்றார் போல் தொகை கிடைக்கும். Post Office-க்கு சென்று உங்களுக்காக கணக்கை தொடங்குங்கள். SHARE.
News August 31, 2025
‘கூலி’ ரிலீஸ் தேதி தெரியுமா?

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி அமேசான் OTT-ல் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படம் ₹500 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பலர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.