News April 18, 2024
தினேஷ் கார்த்திக்கை உலகக் கோப்பையில் சேர்க்கலாம்

நடப்பு ஐபிஎல் தொடரில், தோனியும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி வருவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், தோனி 20(4) ரன்களும், தினேஷ் கார்த்திக் 83(35) ரன்களும் குவித்தனர். தோனியை உலகக் கோப்பையில் விளையாட வைப்பது கடினம். ஆனால், தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது எனத் தெரிவித்தார்.
Similar News
News February 7, 2026
வில்லன் நடிகர் சுனில் தாபா காலமானார்

பாலிவுட்டில் ‘ஏக் தூஜே கே லியே’, தமிழில் விக்ரமின் ’10 எண்றதுக்குள்ள’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வில்லன் நடிகர் சுனில் தாபா(66) மாரடைப்பால் இன்று காலமானார். நேபாளத்தில் பிறந்த அவர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். ‘மேரி கோம்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கோச் கேரக்டரில் நடித்திருந்தார். சுனில் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 7, 2026
Group B-க்கு தள்ளப்பட்ட ரோஹித், கோலி

நட்சத்திர வீரர்களான ரோஹித், கோலிக்கு மத்திய ஒப்பந்தத்தில் BCCI அதிர்ச்சி அளித்துள்ளது. அவர்கள் Group B-க்கு தரமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. A+ பிரிவை நீக்கியுள்ள BCCI, கில், பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு Group A-வில் இடம் வழங்கியுள்ளது. ரோஹித், கோலி இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால், அவர்களின் தற்போதைய விளையாட்டு நிலையை பொறுத்து தரமிறக்கப்பட்டுள்ளனர்.
News February 7, 2026
விஜய் சம்பளத்தை டிக்ளேர் செய்ய முடியுமா? DMK அமைச்சர்

முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே விஜய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக அமைச்சர் MRK பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை தீய சக்தி என்று குற்றம்சாட்டும் விஜய், வரி ஏய்ப்பு செய்து ஊழல் செய்துள்ளதை கோர்ட்டே உறுதிப்படுத்திவிட்டது என்றார். மேலும், விஜய் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என டிக்ளேர் செய்ய தயாரா எனவும் சவால் விடுத்தார்.


