News March 16, 2024
திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையர் அவர்கள் நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கலில் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் கீழ் கட்சி சுவர் விளம்பரம், மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியை ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
Similar News
News October 28, 2025
திண்டுக்கல்: இரவு நேரம் ரோந்து காவலர்கள் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை நாளை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
திண்டுக்கல்: ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பயிற்சி மையங்களான மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம், மாவட்ட மைய நூலகம், மக்களை நோக்கி பயிற்சி மையம், அறிவுசார் மையம் ஆகிய பயிற்சி மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களில் 26 நபர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
News October 27, 2025
பழனி முருகன் சூரசம்ஹாரம் – ஆட்சியர், எம்.எல்.ஏ. பங்கேற்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற கந்தர் சஷ்டித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று ஆன்மிக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, இணை ஆணையர் மாரிமுத்து, பழனி கோட்டாட்சியர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


