News November 15, 2024
டிஜிட்டல் மயத்தால் வளரும் இந்தியா

இந்திய விளையாட்டு சந்தையின் மூலம் 2030க்குள் 1.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் மற்றும் டெலாய்ட் வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் தளங்களின் எழுச்சி இந்தியாவில் விளையாட்டு நுகர்வு மீது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 21 பில்லியன் டாலர் அளவுக்கு மறைமுக வரி வருவாயும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News March 3, 2026
பாஜக மிரட்டலால் கூட்டணியில் இணைந்த கட்சிகள்: உதயநிதி

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய <<19273321>>மோடி <<>>தன்னை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், பயப்பட வேண்டாம் என தங்களிடம் சொல்வதை விட, உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களிடம் சொல்வதே சரியாக இருக்கும் என உதயநிதி பதில் அளித்துள்ளார். பாஜகதான் பல கட்சிகளை மிரட்டி அவர்களுடன் இணைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 3, 2026
கல்லீரலை பாதுகாக்க இரவில் 3 விசயங்களை கடைபிடிங்க!

இந்தியாவில் 40% பேருக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதனை தடுக்க இந்த 3 பழக்கங்களை பின்பற்றுமாறு டாக்டர்கள் கூறுகின்றனர். அதன்படி இரவு 9 மணிக்குள்ளாக சாப்பிட வேண்டும். இதனால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். புரத சத்து உணவை உண்பதும், சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் நடப்பதும் கல்லீரலுக்கு ஆரோக்கியம் தரும் என அறிவுறுத்துகின்றனர்.


