News April 1, 2025
மதியம் 1 மணியில் இருந்து digital services இயங்காது

இன்று (ஏப்.1ஆம் தேதி) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் நிதியாண்டிற்கான வருடாந்திர வங்கிக் கணக்கு மூடல் இருக்கும். இதன்காரணமாக இன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை digital services செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள் தடையற்ற சேவைகளைப் பெற UPI Lite மற்றும் ATM-களைப் பயன்படுத்த வேண்டும் என்று SBI வங்கி அறிவித்துள்ளது.
Similar News
News November 17, 2025
வரலாற்றில் இன்று

1920 – நடிகர் ஜெமினி கணேசன் பிறந்ததினம்
1928 – விடுதலை போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் மறைந்த தினம்
1972 – நடிகை ரோஜா செல்வமணி பிறந்த தினம்
1982 – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பிறந்தநாள்
1993 – நைஜீரியாவில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
News November 17, 2025
நடிகை அதிதி ராவ் பெயரில் வாட்சப்பில் மோசடி

நடிகர் சித்தார்த்துடனான திருமணத்துக்கு பின் நடிகை அதிதி ராவ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் அவரது பெயரை பயன்படுத்தி, வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு போட்டோஷூட் பற்றி பேசி மோசடியில் ஈடுபடுவதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது டீம் மூலமாகத்தான் அனைத்தையும் செய்வதாகவும், இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அதிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 17, 2025
CINEMA 360°: நாய்க்குட்டிக்கு பிறந்தாள் கொண்டாடிய திரிஷா

*டாப் ஸ்டார் பிரசாந்த் சினிமாவில் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். *தனது நாய்க்குட்டிக்கு நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். *வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழை கிடைத்துள்ளது. *புதுமுகங்கள் நடித்துள்ள ‘பஞ்சாயத்து’ வெப் சீரிஸ் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.


