News July 20, 2024
உலகளவில் அதிகரிக்கும் டிஜிட்டல் பேமென்ட்

உலகளவில் டிஜிட்டல் பேமென்ட் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 60 லட்சம் புதிய பயனாளர்கள் UPI வசதியில் இணைகின்றனர். தற்போது, RuPay கிரெடிட் கார்டு பயனாளர்கள் UPI வசதியை பயன்படுத்த முடியும் என்பதால், இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்தியாவில் UPI பரிவர்த்தனை ஜூன் மாதத்தில் 49% உயர்ந்து, 1,390 கோடியாக அதிகரித்துள்ளது.
Similar News
News November 27, 2025
சீமான் மீது டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

சீமானின் தூண்டுதலின் பேரில் தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நாதகவினர் அவதூறு கருத்து பதிவிட்டு வருவதாக டிஐஜி வருண் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி சீமான் மதுரை HC-ல் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்த நிலையில், இப்போது நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
News November 27, 2025
CINEMA 360°: காதலை தூண்டும் அனிருத்தின் ‘Pattuma’ பாடல்

*கோபிசந்த் மாலினேனி இயக்கும் பாலைய்யாவின் 111-வது படம் பூஜையுடன் தொடங்கியது. *சூர்யாவின் கருப்பு படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸுக்கும், சாட்டிலைட் உரிமம் ஜீ5-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. *அனிருத் குரலில் LIK படத்தின் 2-வது பாடலான ‘Pattuma’ வெளியாகியுள்ளது. *நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
News November 27, 2025
அக்னிவீர் பணியிடங்களை அதிகரிக்க முடிவு

2026-ம் ஆண்டுக்குள் அக்னிவீர் பணியிடங்களை ஆண்டுக்கு 1 லட்சமாக அதிகரிப்பது குறித்து ராணுவம் பரிசீலித்து வருகிறது. அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்டு, 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 40,000 வீரர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் வீரர்களின் எண்ணிக்கை 60,000 – 65,000 வரை உள்ளது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், பணியிடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


