News March 26, 2025
அமித் ஷாவிடம் கூட்டணி பற்றி பேசவில்லை: இபிஎஸ்

தமிழக மக்களின் பிரச்னைக்காகவே அமித் ஷாவை சந்தித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருமொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, டாஸ்மாக் முறைகேடு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தே அமித் ஷாவிடம் பேசியதாக கூறினார். 45 நிமிடங்களும் தமிழகத்தில் கிடப்பில் இருக்கும் திட்டங்கள் குறித்தே விளக்கமாக எடுத்துரைத்ததாக கூறினார்.
Similar News
News January 22, 2026
தி.மலை அருகே பயங்கர தீ விபத்து

ஆரணியில் 33 வார்டுகள் உள்ளன. அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து அங்கு குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அவ்வழியாக சென்றவர்கள் யாரோ அணைக்காத பீடி, சிகரெட் போட்டதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் 2 மணிநேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
News January 22, 2026
பெண்கள் விரோத திமுக அரசை தூக்கியெறிவோம்: அன்புமணி

தமிழகத்தில் திமுக ஆட்சியை எதிர்த்து பல்வேறு இடங்களில் அன்றாடம் போராட்டம் நடைபெற்று வருவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், பெண்கள் விரோத திமுக அரசு வரும் தேர்தலில் தூக்கியெறியப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் உள்ளதாகவும், அதனால் கொடூர கொலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
தங்கம் விலை மிகப்பெரிய மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று பெருமளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $24.68 உயர்ந்து $4,786.14-க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலை 1 அவுன்ஸ்-க்கு $3.57 குறைந்து $91.17 ஆக உள்ளது. இதனால், இன்றும் (ஜன.22) இந்திய சந்தையில் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


