News October 27, 2024
ஜெயிலர் படத்திற்கு வசனம் எழுதினேனா? KSR மறுப்பு

ஜெயிலர் படத்துக்கு இயக்குநர் KS ரவிக்குமார் வசனம் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. இதை KS ரவிக்குமார் மறுத்துள்ளார். ரஜினி தன்னிடம் படத்தின் கதையை சொன்னதாகவும், அப்போது 2 மாற்றங்களை செய்யும்படியே கூறியதாகவும், இதுதவிர வேறு எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். செய்யாததை செய்ததாக கூறாமல், KSR இப்படி வெளிப்படையாக சொன்னதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
ஜனவரி 17: வரலாற்றில் இன்று

*1706 – அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்கிளின் பிறந்தார். *1773 – இங்கிலாந்து கப்பல் கேப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக்காவை அடைந்தார். *1917 – தமிழக முன்னாள் CM எம்.ஜி. ஆர் பிறந்தார். *1942 – அமெரிக்க குத்து சண்டை வீரர் முகம்மது அலி பிறந்தார். *2010 – மேற்கு வங்கத்தின் முன்னாள் CM மற்றும் CPM கட்சியின் முக்கிய தலைவரான ஜோதி பாசு காலமானார்.
News January 17, 2026
இந்தியாவில் மோசமான சூழல்: டென்மார்க் வீராங்கனை

காற்று மாசுபாடு, மோசமான ஏற்பாடு ஆகிய காரணங்களால் டெல்லியில் நடக்கும் <<18857250>>இந்திய பேட்மிண்டன் ஓபனை<<>> சர்வதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்ஃபெல்ட், இந்தியாவில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு சர்வதேச போட்டிக்கு இதுபோன்ற மோசமான ஏற்பாடுகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் கூறியுள்ளார்.
News January 17, 2026
முகமது அலி பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *என் வலுவான எதிராளி எப்பொழுதும் நான்தான்.


