News March 29, 2025

IPL புள்ளி பட்டியலில் இதை நோட் பண்ணிங்களா?

image

‘வாழ்க்கை ஒரு வட்டம், இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்’ என்ற விஜய் பட வசனம் IPL புள்ளி பட்டியலுக்கு அப்படியே பொருந்துகிறது. தற்போதைய நிலவரப்படி, டேபிள் டாப்பர்களாக இருக்கும் 4 அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை. RCB, LSG, PBKS, DC ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. 5 கோப்பைகளை வென்ற CSK, MI அணிகள் முறையே 7, 8 ஆம் இடத்தில் உள்ளன. இந்த வருஷம் யாரு கப் அடிப்பாங்க?

Similar News

News January 15, 2026

₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் ₹20 லட்சம் தொகையை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

News January 15, 2026

விபத்தில் 6 பெண்கள் பலி.. பொங்கல் நாளில் சோகம்!

image

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் கார் – லாரி மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகர சங்கராந்தி விழாவுக்கு(வட மாநிலங்களின் பொங்கல்) பதேபூருக்கு சென்றபோது விபத்து நிகழ்ந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

News January 15, 2026

ஜனநாயகத்தை வழி நடத்தும் பெண்கள்: PM மோடி

image

இந்தியாவின் முக்கியமான தூணாக பெண்கள் மாறிவிட்டதாக காமன்வெல்த் மாநாட்டில்(CSPOC) PM மோடி பேசியுள்ளார். இந்தியாவின் பெண்கள் ஜனநாயகத்தில் பங்கேற்பது மட்டுமல்லாமல் அதை வழிநடத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், நாட்டின் ஜனாதிபதியே ஒரு பெண் தான் என்றார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்த போக்கே இந்திய ஜனநாயகத்தில் பலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!