News March 28, 2025

தெரியுமா உங்களுக்கு?

image

☛சராசரியாக வயது வந்தவரின் கை முஷ்டி அளவுக்கு இதயம் இருக்கும். ☛நாள் ஒன்றுக்கு இதயம் 100,000 முறை துடிக்கிறது. ☛சராசரி எடை 250 – 350 கிராம் ☛கருத்தரித்த 4 வாரங்களில் இதயத்துடிப்பு துவங்கிவிடும். ☛உடலுக்கு வெளியேவும் இதயம் துடிக்கும். ☛முதல் இதய அறுவை சிகிச்சை அமெரிக்காவில் 1983ல் நடந்தது. ☛திங்கள்கிழமைகளில் அதிக மாரடைப்பு நிகழ்கின்றன.

Similar News

News March 31, 2025

எந்நேரமும் 3ம் உலகப் போர்.. பிரபலம் கணிப்பு

image

கொரோனா, 2ம் எலிசபெத் ராணி மறைவு, உக்ரைன் மீதான ரஷ்ய போர் உள்ளிட்டவற்றை கணித்ததாக கூறப்படுபவர் பிரேசிலின் அதோஸ் சலோமே. இதனால் அவர், வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படுகிறார். தற்போது அவர், நாசவேலை, கடலுக்கு அடியே கேபிள் துண்டிப்பு போன்ற ஹைபிரிட் சம்பவங்களால் 3ஆம் உலகப் போர் எந்நேரமும் வெடிக்கலாம், இதை எதிர்கொள்ள பிரிட்டன் போன்ற நாடுகள் தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளார்.

News March 31, 2025

பிரபல நடிகர் தின்கர்ராவ் மானே காலமானார்

image

இந்தி, மராத்தி திரையுலகில் பிரபலமான நடிகர் கிரண் மானேவின் தந்தை தின்கர்ராவ் மானே (86) உடல்நலக்குறைவால் காலமானார். இதனை, நடிகர் கிரண் மானே தனது ஃபேஸ்புக்கில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். தின்கர்ராவ் மானேவின் உடல் சத்தாராவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு மஹுலி கைலாஷ் கல்லறையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

News March 31, 2025

கொலை செய்தாரா ராஜ்குமார்? மூத்த நடிகர் பரபரப்பு தகவல்

image

மறைந்த இந்தி நடிகர் ராஜ்குமார் குறித்த பரபரப்பு தகவலை நடிகர் ராஜ்முராத் வெளியிட்டுள்ளார். ராஜ்குமார் பீச்சுக்கு சென்றபோது, காதலியை கேலி செய்தவரை கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர் இறந்து விட்டதால் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ்குமாருக்கு ஆதரவாக தனது தந்தை செயல்பட்டதாகவும் முராத் கூறியுள்ளார். எனினும் ராஜ்குமார் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!