News March 19, 2024
உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

மக்களவைத் தேர்தலையொட்டி ‘விக்சித் பார்த் சம்பர்க்’ என்ற பெயரில் மத்திய பாஜக அரசு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி வருகிறது. இந்த நிலையில், இதே பெயரை பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மக்களிடம் கருத்து கேட்பது போல, அவர்களது செல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் பணத்தை திருடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?
Similar News
News January 20, 2026
திமுக கூட்டணியில் அடுத்த கட்சி.. முடிவு இறுதியாகிறது

தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்ததாக தகவல் கசிந்துள்ளது. இதில் கூட்டணியை பற்றி அனைவரும் டிஸ்கஸ் செய்த நிலையில், இறுதியாக அன்புமணி இருக்கும் அணிக்கு போவதாக இல்லை என ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், NDA கூட்டணியை தவிர்த்து ராமதாஸ் தரப்பு திமுக அல்லது தவெக கூட்டணியை தேர்வு செய்யலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News January 20, 2026
பேரவையில் மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார் கவர்னர்

2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆனால் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என கூறி கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். இதனை கண்டித்த CM ஸ்டாலின், கவர்னரின் செயல் அவையின் மரபிற்கு அவமதிப்பு எனவும், ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார். இதனால் கவர்னர் உரை வாசிக்கப்பட்டதாக கருதப்படுவதாக CM ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.
News January 20, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை இன்று (ஜன.20) சவரனுக்கு ₹1,280 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹160 உயர்ந்து ₹13,610-க்கும், சவரன் வரலாறு காணாத புதிய உச்சமாக ₹1,08,880-க்கும் விற்பனையாகிறது. <<18893945>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதே இந்திய சந்தையில் உயரக் காரணம் எனவும், இது அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


