News October 14, 2025

உங்களுக்கு தீபாவளி பரிசு கிடைச்சுதா?

image

GST-யில் மாற்றம் செய்து தீபாவளி பரிசு என அறிவித்த PM மோடி, இந்த வரிக் குறைப்பால் மக்களுக்கு பணம் மிச்சமாகும் எனக் கூறியிருந்தார். தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பெரும்பாலானோர் புத்தாடை, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருள்கள், எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கியிருப்பீர்கள். வரிக் குறைப்பால், இந்த தீபாவளி ஷாப்பிங்கில் உங்க கிட்ட எவ்வளவு பணம் மிச்சமாச்சு? கமெண்ட்டில் சொல்லுங்க.

Similar News

News October 15, 2025

‘டியூட்’ படத்திற்காக தூக்கத்தை தொலைத்த நடிகை

image

‘டியூட்’ படத்தில் தனக்கு பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருப்பதாக நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால், இரவில் தூங்காமல் வசனங்களை மனப்பாடம் செய்து பயிற்சி எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், தனது நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

International Roundup: 9 பேரை கொன்ற இஸ்ரேல்

image

*வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தியதாக படகின் மீது USA நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். *மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. *அமைதி ஒப்பந்தத்தை மீறி 9 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றது. *வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு நோபல் பரிசு அறிவித்ததை அடுத்து, நார்வேயில் உள்ள தூதரகத்தை அந்நாடு மூடியது. *கிராமி விருது வென்ற USA பாடகர் டி ஏஞ்செலோ (51) கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார்.

News October 15, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 15, புரட்டாசி 29 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM -10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சிறப்பு: புதன் வழிபாட்டு நாள், கரிநாள். ▶வழிபாடு: நவ கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு பச்சைப்பயறு நைவேத்யம் செய்து வழிபடுதல்.

error: Content is protected !!