News September 29, 2025
தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டாரா விஜய்?

கரூரில் நிகழ்ந்த கூட்டநெரிசலைத் தொடர்ந்து அன்றிரவே சென்னை திரும்பிய விஜய், தற்போது திருச்சி விமானம் நிலையத்திற்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அவர் வீட்டிலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில், சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு Charter flight ஒன்று கிளம்பியதையும், ஒப்பிட்டு பார்த்து இச்செய்தி வெளியாகி இருக்கிறது.
Similar News
News September 29, 2025
BREAKING: விஜய்க்கு பின்னடைவு

<<17862356>>தவெக <<>>மனுவை அவசர வழக்காக உடனே ஏற்க முடியாது என HC மதுரை கிளை பதிவாளர் மறுத்துவிட்டார். தவெக சார்பில் அளிக்கப்படும் மனு நாளை ஏற்கப்பட்டு, வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே, மக்களை நேரில் விஜய் சந்திக்காதது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில், HC-ம் இவ்வாறு கூறிவிட்டதால், வெள்ளிக்கிழமை வரை அவர் கரூர் செல்ல வாய்ப்பில்லை. இது விஜய் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
News September 29, 2025
இன்று உலக இதய நாள்.. இந்த 2 டெஸ்ட் பண்ணுங்க!

மனிதனின் CPU-வான இதயம் கொஞ்சம் மக்கர் பண்ணாலும், பிரச்னைதான். அந்த CPU-வை ஆரோக்கியமாக பராமரிப்பதுடன், அவ்வப்போது அது ஹெல்தியாக இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அதற்கு இந்த 2 டெஸ்டை பண்ணுங்க. ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறித்து அறிய Lipid Profile டெஸ்ட் & இதயத் துடிப்பின் மின் செயல்பாட்டை அறிய ECG டெஸ்ட் பண்ணுங்க. இன்று உலக இதய நாள் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE.
News September 29, 2025
கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக-பாமக

தைலாபுர இல்லத்திற்கு சென்று ராமதாஸை அதிமுக MP சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். முன்னதாக, சி.வி.சண்முகத்தை சந்தித்த நயினார் நாகேந்திரன், பாமகவுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறியிருந்தார். எனவே, அதிமுக-பாஜக கூட்டணியை தேர்ந்தெடுக்கும் முடிவில் அன்புமணி இருக்கும் நிலையில், ராமதாஸ் டேக் டைவர்ஷன் எடுக்கக்கூடாது என்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.