News December 28, 2024
ஏற்றி விட்டவரை மறந்தாரா விஜய்?

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சினிமா, அரசியல் பிரபலங்கள் பலரும் கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இது குறித்த காட்சிகள் சோஷியல் மீடியாக்களை ஆட்கொண்டுள்ளன. செந்தூரபாண்டி படத்தின் மூலம் அடையாளத்தை தேடித் தந்த விஜயகாந்துக்கு நடிகர் விஜய் மரியாதை செலுத்தாதது ஏன்? என பலரும் கமெண்ட் செய்கின்றனர். அதேவேளையில் TVK சார்பில் புஸ்ஸி ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Similar News
News March 5, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News March 5, 2026
தமிழக அரசியலில் இதுவே முதல்முறை

2026 தேர்தலுக்கு திமுக 21 கட்சிகளுடன் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. TN அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் மேலும் புதிய கட்சிகளை சேர்த்து 4-வது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்கூட(பிரேமலதா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர்) திமுகவுடன் இணைந்துள்ளன.
News March 5, 2026
மக்களுடன் தான் தவெக கூட்டணியா?

காங்., உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், முஸ்தபா ஆகியோர் விஜய்க்கு ஆதரவளித்தாலும், பெரிய கட்சியான காங்., வரும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ‘மக்களுடனே கூட்டணி’ என்ற நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?


