News October 9, 2025
விஜய்யை அடிமை என சொன்னாரா உதயநிதி?

பழைய அடிமை EPS மட்டுமின்றி, இப்போது புது அடிமைகளையும் பாஜக வலைவீசி தேடுவதாக DCM உதயநிதி விமர்சித்துள்ளார். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும் என பொடிவைத்து பேசிய அவர், அதிமுகவின் துணையோடு பாஜக அனைத்தையும் செய்வதாக கூறினார். மேலும், எத்தனை அடிமைகள் வந்தாலும் கருப்பு, சிவப்பு அணிந்திருக்கும் திமுககாரன் இருக்கும் வரை தமிழகத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாது என அவர் சவால்விட்டிருக்கிறார்.
Similar News
News October 9, 2025
Bigg Boss-க்கு வார்னிங் கொடுத்த DCM

மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாததால் கன்னட பிக்பாஸ் செட்டை மூட கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவதாக கூறிய கர்நாடக DCM டி.கே.சிவகுமார், இனி இப்படி நடக்கக்கூடாது என வார்னிங்கும் கொடுத்தார். மேலும், இடத்துக்கு சீல் வைத்தால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
Cab-ல போறீங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கணுமே!

பெண்களே, Cab-ல் பயணிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் வந்தால் பதற்றமடைய வேண்டாம். 112 என்ற நம்பருக்கு டயல் செய்தால் போதும். 10 நிமிடங்களில் லொகேஷனை டிராக் செய்து நீங்கள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் வந்துவிடும். ‘112 APP’ என்ற செயலியையும் போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். எப்போது பிரச்னை வந்தாலும், இது உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News October 9, 2025
கயாது காட்டில் பட மழை

சுந்தர் C இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில், கயாது லோஹர் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் 2 ஹீரோயின்கள் எனவும், இன்னொரு ஹீரோயினுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ நடித்து முடித்த கயாது, சிம்பு, ஜி.வி.பிரகாஷ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுபோக தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.