News October 27, 2025
நாங்க 3 பேரு தான் சினிமாவ சீரழிச்சோமா? பா.ரஞ்சித்

வெற்றிமாறன், மாரி செல்வராஜ், நான் என 3 பேர் தான் தமிழ் சினிமாவை சீரழித்தோமா என்று பா.ரஞ்சித் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘காந்தாரா’ படம் நல்ல வெற்றி பெற்ற பிறகு, தமிழ் சினிமாவில் இப்படியில்லை, இவர்கள் தான் சினிமாவை கெடுக்கின்றனர் என கூறுவதாக அவர் தெரிவித்தார். 2 ஆண்டுகளில் 600 படங்கள் வெளியாகும் தமிழ் சினிமாவில், அதன் இயக்குநர்கள் கோலிவுட்டை உயர்த்த எதுவும் செய்யவில்லையா என்றும் கேட்டுள்ளார்.
Similar News
News October 27, 2025
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

*புத்திசாலிகளை போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபர்களை போல பேசுங்கள்.
*தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன்.
*கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை.
*தனது அச்சங்களை வென்றவர் தான், உண்மையிலேயே சுதந்திரமாக இருப்பார்.
*கீழ்ப்படிய கற்றுக்கொள்ளாதவன் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது.
News October 27, 2025
EPS எங்களை பாராட்டவா செய்வார்? துரைமுருகன்

CM ஸ்டாலின் ஒரு சினிமா விமர்சகராக மாறிவிட்டார் என்று EPS கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் என்றால் அப்படித்தான் பேசுவார், பிறகு எங்களை பாராட்டவா செய்வார் என்று தெரிவித்தார். மேலும், CM உத்தரவின் பேரில் நெற்பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News October 27, 2025
ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ரஹானே

ரஞ்சி டிராபியில் இன்று ரஹானே 159 ரன்களை விளாசினார். இதையடுத்து அவர் பேசும்போது, தன்னை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆஸி.,க்கு எதிரான BGT தொடரின் போது அணிக்கு நான் தேவைப்பட்டேன். ஆனால், BCCI தன்னிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. வயது என்பது வெறும் எண் தான் என்பதை ரோஹித்தும், கோலியும் நிரூபித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


