News October 1, 2025
வாரிசுக்கு ‘நோ’ சொன்னதா திமுக தலைமை?

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு பதிலாக தனது 3வது மகன் மகேஷை எப்படியாவது திருச்செந்தூரில் நிறுத்திவிடலாம் என்ற யோசனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் கூட தலைமையின் காதுகளுக்கு விஷயத்தை அமைச்சர் தரப்பு பாஸ் செய்ததாம். ஆனால் தலைமையோ, அது சரிவராது எனவும், தேர்தல் வேலைகளை கவனியுங்கள் என்றும் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News March 26, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News March 26, 2026
PNG இணைப்புக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு

PNG இணைப்பை பெற விருப்பமுள்ள வணிக & தொழில்துறையினர் CGD நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என TN அரசு தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Torrent Gas: 1800-2125-6789), காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (AG&P/Think Gas: 1800-202-2999), திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Adani Total Gas: 079-47545252) தொடர்பு கொள்ளவும். இதர மாவட்டங்களுக்கு இந்த <
News March 26, 2026
தாமரைக்கு வாக்களித்து பாவம் செய்யாதீர்கள்: கருணாஸ்

தமிழக வரலாற்றில் பாஜகவுக்கு இவ்வளவு சீட் கொடுத்ததாக தனக்கு ஞாபகமில்லை என கருணாஸ் கூறியுள்ளார். அதிமுகவிடம் சீட் வாங்கிய பாஜக, சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் நிற்க வைக்கிறது; தேர்தலுக்கு பிறகு அவர்களின் வாக்கு சதவீதத்தையும் தங்கள் கணக்கில் அது சேர்த்துவிடும் என விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து, பாவகாரியம் செய்து விடாதீர்கள் எனவும் எச்சரித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


