News August 8, 2024
இந்துக்களுக்காக குரல்கொடுக்க ஸ்டாலினுக்கு மனமில்லை?

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை INDIA கூட்டணி வேடிக்கை பார்ப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்களை குறிவைத்து வன்முறை வெறியாட்டம் நடந்துவருவதாகக் கூறிய அவர், பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்த ஸ்டாலினுக்கு, வங்கதேச இந்துக்களுக்காக குரல் கொடுக்க மனம் வரவில்லை என விமர்சித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
குளிர்காலத்தில் இந்த சூப்களை டிரை பண்ணுங்க

சூப் குடிப்பதால் செரிமானம் மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. குளிர்காலங்களில் சூப் குடிப்பது, உடலை இதமாக வைத்திருக்க உதவும். பலவகையான சூப்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த சூப் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News December 14, 2025
இளம் பெரியார் உதயநிதி: அமைச்சர் எ.வ.வேலு

தனது பிறந்தநாளில் கருப்பு உடை அணிந்த மற்றொரு இளம் பெரியார் உதயநிதி என அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டியுள்ளார். திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அவர், திராவிட இயக்கத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்கு உதயநிதி எடுத்துச் செல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவின் 5-வது தலைமுறையாக உதயநிதி உருவெடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
News December 14, 2025
வங்கி கணக்கில் ₹4,000.. அரசு புதிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹4,000 வழங்கும் PM யாசஸ்வி உதவித் தொகை திட்டத்திற்கான புதுப்பித்தல், புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை(டிச.15) வரை <


