News January 24, 2025
கருணாநிதி அரசியல் பாதைக்கு மாறினாரா ஸ்டாலின்?

திமுக தலைவராக <<15242757>>கருணாநிதி <<>>இருந்தபோது தேமுதிக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் திமுகவில் கூட்டாக சேர்ந்தனர். மதிமுக முன்னணி தலைவர்கள், அதிமுக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திமுகவில் சேர்ந்த வரலாறு உண்டு. அதேபாணியில் ஸ்டாலின் முன்னிலையில் இன்று 3,000 பேர் திமுகவில் சேர்ந்துள்ளனர். இதை வைத்து, கருணாநிதி பாதைக்கு ஸ்டாலின் மாறிவிட்டாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News November 21, 2025
ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் PM மோடி

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் PM மோடி பங்கேற்கிறார். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3 அமர்வுகளில் PM மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு மத்தியில், சில தலைவர்களுடன் PM மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 21, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் 1 அவுன்ஸ்(28g) $16.32 சரிந்து $4,065-க்கும், வெள்ளி(1 அவுன்ஸ்) $0.83 குறைந்து $50.74-க்கும் விற்பனையாகிறது. நேற்று(நவ.20) சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடித்ததால் நம்மூர் சந்தையில் சவரனுக்கு ₹800 குறைந்தது. இன்றும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 21, 2025
ரஜினி – கமல் காம்போவில் இளையராஜா இணைவாரா?

கமல் தயாரிக்க ரஜினி நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சுந்தர் சி வெளியேறியதால், மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்கும் பணியில் ரஜினி தீவிரமாக உள்ளனர். இதனிடையே இந்த படத்தில் இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதா என கமலிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இசையமைப்பாளர், இயக்குநர் எல்லாவற்றையும் ரஜினியே தேர்வு செய்வார் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.


