News January 20, 2025
சொந்த ஊருக்கு சென்றது இவ்வளவு மக்களா?

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஜனவரி 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 4.24 லட்சம் பயணிகள் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பணம் மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பொங்கல் விடுமுறையின் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 67,659 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்தாண்டு பொங்கலுக்கு 3.34 லட்சம் பயணிகளே பயணம் செய்த நிலையில், இது 27% அதிகம் என்று போக்குவரத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 27, 2026
சென்னை அண்ணா பல்கலை., மீண்டும் பாலியல் புகார்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். நான் உனக்கு தந்தை போல எனக்கூறி கடந்த 3 ஆண்டுகளாக நேரிலும், தொலைப்பேசியிலும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை போல நிறைய மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரப்பரப்பு புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டையே உலுக்கிய SIR விவகாரம் ஓயாத நிலையில், மீண்டும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
News March 27, 2026
PCOD, PCOS பிரச்னைகளுக்கு எளிய தீர்வு!

90% பெண்களுக்கு PCOD, PCOS போன்ற மாதவிடாய் பிரச்னைகள் இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய, கைவைத்தியம் இருக்கிறது. கருப்பட்டி, பெருங்காயம், பூண்டை சம அளவு எடுத்து இடித்து, அதை நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடித்து சாப்பிட வேண்டும். 1 மாதத்திற்கு காலையில் சாப்பிட்டு வர PCOS சரியாகும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதோடு உடற்பயிற்சி செய்வதும், சத்தான உணவுகளை உட்கொள்வதும் அவசியம். SHARE.
News March 27, 2026
BREAKING: தனித்து போட்டி.. இரவில் அறிவித்தார்

70 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் 12 – 15 சீட் வரை கேட்டோம்; 7 தொகுதிகளை கூறச் சொன்னார்கள் என்ற அவர், EPS உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றார். அதிமுக புறக்கணித்ததை எண்ணி தேவேந்திர குல மக்கள் வேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் ராஜ்யசபா சீட்டையும் கேட்டிருந்தார்.


