News April 13, 2024
ராகுகாலம் பார்க்காமல் வேட்புமனு செய்தது உண்டா?

ராகு காலம் பார்க்காமல் எந்தவொரு திமுக வேட்பாளராவது வேட்புமனு தாக்கல் செய்தது உண்டா? என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த தமிழிசை, இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிய நீங்கள் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்?, தமிழர்களை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனவும் கடுமையான சாடியுள்ளார்.
Similar News
News January 24, 2026
சிவகங்கை: பெண் தற்கொலை!

கல்லல் அருகே குருந்தபட்டு பகுதியை சேர்ந்த கருப்பையா – மல்லிகா (56) தம்பதியினர். இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த மல்லிகா ஜன. 22 அன்று அரளிவிதையை அரைத்து குடித்துள்ளார். அவரை மீட்டு செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கல்லல் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
பாதாளச் சாக்கடையில் கொசுவலை: மேயர் விளக்கம்

சென்னையின் சில இடங்களில் பாதாளச் சாக்கடை மூடியின் அடிப்பகுதியில் <<18935030>>கொசுவலை<<>> போர்த்தியது விமர்சனத்திற்கு உள்ளானது. இது கொசுக்களுக்காக வைக்கப்பட்டது அல்ல என மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். ஒரு கவுன்சிலரின் வேண்டுகோளின்படி வைக்கப்பட்டது என்றும், மாநகராட்சியின் முன்னெடுப்பு அல்ல எனவும் அவர் கூறினார். இதை இவ்வளவு சர்ச்சையாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரியா தெரிவித்தார்.
News January 24, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹2,800 உயர்ந்த நிலையில், இன்று(ஜன.24) மேலும் ₹560 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,620-க்கும், சவரன் ₹1,16,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது.


