News October 7, 2025
ரஜினி, கமலுக்கு NO சொன்ன பிரதீப்?

ரஜினி, கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தை தான் இயக்கவில்லை என்று பிரதீப் ரங்கநாதன் விளக்கமளித்துள்ளார். அப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த அவர், தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். ‘LIK’ படத்திற்கு பிறகு, யாரும் கணிக்கமுடியாத Sci-fi படம் ஒன்றை இயக்கி நடிக்கவுள்ளதாக அவர் பேசியுள்ளார்.
Similar News
News October 7, 2025
அரசியல் நோக்கத்தோடு PM செயல்படுகிறார்: மம்தா

மேற்குவங்கத்தில் <<17928599>>பாஜக MP தாக்கப்பட்டது<<>>, திரிணாமுல் காங்., ஆட்சியின் மோசமான நிலையை காட்டுவதாக PM மோடி சாடியிருந்தார். இந்நிலையில், இவ்விவகாரத்தை PM அரசியலாக்குவது கவலைக்குரியது என CM மம்தா பானர்ஜி ரிப்ளை கொடுத்துள்ளார். ஆதாரம் இல்லாமல் திரிணாமுல் காங்., மீதும், அதன் ஆட்சி மீதும் குற்றம்சாட்டுவதாக கூறிய அவர், விசாரணை மூலமாகவே யார் மீது தவறு என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
சிறுமி வன்கொடுமை: காமெடி நடிகர் கைது

சென்னையில் விடுதி ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சினிமா இயக்குநரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை இறந்து போனதால், அவரது தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், தனிமையில் தவித்த சிறுமியை கவனித்து வந்த, தாயின் தோழி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இச்சம்பவத்தில் முக்கிய கட்சியின் நிர்வாகியும் சிக்கியுள்ளார்.
News October 7, 2025
மூலிகை: வசம்பின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, வசம்பை தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்களும் நீங்கும் *விஷம் அருந்தியவர்களுக்கு உடனே வசம்பு தூளை கொடுத்தால், விஷம் முறிந்துவிடும் *வசம்பு பொடியுடன் கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து குடித்தால், சளி, இருமல், வயிறு உப்புசம் ஆகியவை நீங்கும். SHARE IT.