News September 6, 2025
மோசமான பட்டியலில் இருந்து தப்பினாரா முருகதாஸ்?

இந்த ஆண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு மிகவும் மோசமானதாகவே அமைந்தது. ஷங்கர், மணிரத்னம், லோகேஷ் என அனைவரும் சறுக்கினர். இந்த லிஸ்ட்டில் நாமும் இணைந்துவிடக் கூடாது என ‘மதராஸி’ பட புரமோஷனில் AR முருகதாஸ் உள்பட படக்குழுவே அதிகமாக ஹைப் ஏற்றாமல் இருந்தது. இந்நிலையில், இப்படம் ரிலீஸாகி ஓரளவு நல்ல விமர்சனங்களை பெறுவதால் ARM தப்பித்ததாக கூறப்படுகிறது. நீங்க படம் பார்த்தாச்சா?
Similar News
News September 6, 2025
1 மணி தலைப்புச் செய்திகள்

*அதிமுக பொறுப்புகளில் இருந்து <<17629139>>செங்கோட்டையன் நீக்கம்<<>>
*<<17628210>>இந்தியா – அமெரிக்கா<<>> மீண்டும் நெருக்கம்
*ஜெர்மனி பயணத்தால் ₹<<17627007>>15,516 கோடி முதலீடு<<>>: CM ஸ்டாலின்
*<<17628629>>விஜய் உடன் கூட்டணி<<>>? TTV தினகரன் பதில்
*<<17627852>>தங்கம் விலை <<>>மீண்டும் உயர்வு
*<<17626530>>FIDE Grand Swis<<>>s: டிராவில் முடித்த குகேஷ்
News September 6, 2025
விளக்கம் கேட்காமல் பதவி பறிப்பு: செங்கோட்டையன்

தன்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று தான் கூறியதைப்போல் ஒருங்கிணைப்பு பணி தொடரும் எனவும் கூறியுள்ளார். மேலும், பொதுச்செயலாளருடன், 6 பேர் கொண்ட குழு சந்தித்து ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசியது உண்மை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
TTV பேசியது பற்றி தனக்கு தெரியாது: நயினார் விளக்கம்

கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாக வழிநடத்தவில்லை என <<17628741>>TTV தினகரன்<<>> குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஏன் அப்படி சொன்னார் என தனக்கு தெரியாது என நயினார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனவும், எந்த கட்சியையும் சிறிய கட்சி என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.