News October 9, 2025
10 பெண்களை ஏமாற்றினாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

மாதம்பட்டி மீதான புகாரில் ஜாய் கிரிசில்டாவின் வழக்கறிஞராக MP சுதா களமிறங்கியுள்ளார். இந்நிலையில், சுதாவுடன் சென்று மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் ஜாய். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னைப் போல 10 பெண்களை ரங்கராஜ் ஏமாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், தனக்கும் தனது குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு ரங்கராஜ்தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 9, 2025
3 துணை முதல்வர்கள்: மெகா கூட்டணியின் புதிய திட்டம்!

பிஹாரில் ‘INDIA’ கூட்டணி புதிய வியூகத்துடன் களமிறங்குகிறது. இதற்காக காங்கிரஸ் தொகுதிகளை விட்டுக் கொடுத்து 57 இடங்களில் போட்டியிட தயாராகியுள்ளதாம். கடந்த முறை 70 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுக்காக தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியையும், OBC, SC, முஸ்லிம் என 3 துணை முதல்வர்கள் வியூகத்தையும் வகுத்துள்ளதாம். புதிய வியூகம் NDA-வை வீழ்த்த உதவுமா?
News October 9, 2025
இருமல் சிரப் விவகாரம்: விளக்கம் கேட்கும் WHO

குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்திய <<17955764>>இருமல் சிரப்<<>>, பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து இந்திய அதிகாரிகளிடம் WHO விளக்கம் கேட்டுள்ளது. இந்தியா தரும் விளக்கத்தை பொறுத்து, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ‘Coldrif’ இருமல் சிரப் குடித்து ம.பி., ராஜஸ்தானில் 21 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News October 9, 2025
நயனின் சினிமா வயது 22 ஆனது.. நெகிழ்ச்சி ❤️❤️

சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததை நயன்தாரா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். திரைப்படங்கள் தன் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல், கேமரா முன்பு முதல்முறையாக நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன எனவும், ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், தன்னை வடிவமைத்து உருவாக்கியதாகவும் அவர் பூரிப்படைந்துள்ளார். நயன் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க.