News October 14, 2025
நானா இப்படி நடித்தேன்?

நானா இப்படி நடித்தேன் என ஆச்சரியப்படும் அளவிற்கு ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘பிரேமம்’ படத்தில் நடித்ததை போன்ற ஒரு பேரார்வத்தை, இந்த படத்தில் நடித்த போது தன்னால் உணர முடிந்ததாகவும், இப்படத்திற்கு பிறகு புதிதாக பிறந்தது போல உணருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், செங்கல் தயாரிப்பு, உழவுப்பணி இதையெல்லாம் கற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
அதிரடி ஆஃபர்.. இலவசமாக ₹1,000 ரீசார்ஜ்!

டோல்கேட்டில் பாத்ரூம் அசுத்தமாக இருந்தால், உடனே NHAI-யிடம் புகார் அளித்து, Fastag-க்கு ₹1,000 டாப்- அப் பெறலாம். ‘<
News October 14, 2025
போலி மருந்துகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் 3,000 நிறுவனங்களில் தயாரிக்கப்படும் 10,500 மருந்துகளை ஆய்வு செய்ய 1,467 ஆய்வாளர்களே பணியில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TN-ல் 112 மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். Coldrif Syrup குடித்த 22 குழந்தைகள் பலியான சம்பவத்தால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் முறையாக ஆய்வு செய்யாததால் பல மாநிலங்களில் போலி & தரமற்ற மருந்துகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
News October 14, 2025
உங்களின் சாய்ஸ் எது?

சீனியர் ஹீரோக்கள் இல்லாமல் இந்த வருடம் தீபாவளி ட்ரீட்டாக பிரதீப் ரங்கநாதனின் ‘டூட்’, துருவ் விக்ரமின் ‘பைசன்’, ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளன. இந்த 3 படங்கள் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், 3 படங்களின் டிரெய்லர்களும் வெளிவந்துவிட்டன. இவற்றில், உங்களின் ஆர்வத்தை தூண்டிய படம் எது.. கமெண்ட் பண்ணுங்க?