News October 17, 2025
ஹரிஷ் கல்யாணுக்கு கை கொடுத்ததா டீசல்?

வட சென்னையில் கச்சா ஆயிலை கடத்துவதை மையமாக கொண்டு ‘டீசல்’ படம் உருவாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் ‘டீசல்’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாற முயற்சித்துள்ளார். அதுல்யாவின் லவ் போர்ஷன் படத்துக்கு கை கொடுக்காமல், சிக்கலாக மாறியுள்ளது. திபு நினன் தாமஸின் இசை படத்துக்கு ஒரு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. ரசிகர்களை கவரும் விதமான காட்சிகளை படத்தில் அதிகம் வைத்திருந்தால் இந்த டீசல் மிகப்பெரிய படமாக மாறியிருக்கும்.
Similar News
News October 18, 2025
பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய மாணவர்கள்

அந்த காலத்து 90ஸ் கிட்ஸ் தேர்வு எழுத பயந்துவிட்டு வயிறு வலி, காய்ச்சல் அடிப்பதாக கதைவிடுவார்கள். ஆனால், இன்றைய 2K கிட்ஸ் தேர்வை நிறுத்த பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் அளவிற்கு துணிந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில், போலியான கல்லூரி அறிக்கையை தயாரித்த மாணவர்கள் அதை SM-ல் பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக 2 மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது.
News October 18, 2025
அமைச்சர் குடுகுடுப்பைக்காரன் போல் பேசக்கூடாது: அன்புமணி

TRB ராஜா அமைச்சரை போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என அன்புமணி விமர்சித்துள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்ததுபோல், முதலீடுகள் கண்டிப்பாக வரும் என மீண்டும் மீண்டும் சொல்லும் ராஜா, அது எப்போது வருமென சொல்லவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும் மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல், உண்மையாகவே முதலீடுகளை ஈர்க்க திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
News October 18, 2025
ராசி பலன்கள் (18.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.