News April 11, 2025

பணிந்தது பாஜகவா? எடப்பாடியா?

image

பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிவந்த EPS, இப்போது பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டார். அவரை திருப்திப்படுத்த தமிழக பாஜக தலைமையில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. ஆனால், அதிமுகவோ, தேர்தலில் வென்றால் பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு தர ஒப்புக்கொண்டுள்ளது. சசிகலா, டிடிவி தொடர்பாக பிறகு முடிவெடுக்கலாம் எனவும் அமித் ஷா கூறுகிறார். அப்படியானால் இதில் வென்றது யார்- பாஜகவா? அதிமுகவா?

Similar News

News December 10, 2025

ஓஷோ பொன்மொழிகள்

image

*நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது. *உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதுவே உங்கள் ஒரே ஆசிரியர். *அன்பே தெய்வீகத்தை நோக்கிய முதல் படி, சரணடைதலே இறுதிப் படி. மேலும் இரண்டு படிகளே முழுப் பயணமுமாகும்.

News December 10, 2025

டிரம்ப்பை சீண்டியதால் இந்தியா மீது வரி: ரகுராம்

image

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் காரணமில்லை என்று கூறியதே, இந்தியா மீது அமெரிக்கா 50% வரிவிதிக்க காரணம் என RBI EX கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கூற்று டிரம்ப்பின் ஈகோவை சீண்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டது. டிரம்ப்பால் தான் போர் நின்றது என்று துதிபாடியதால், அமெரிக்கா 16% வரியோடு நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

குடியுரிமை பெறும் முன்னரே வாக்காளர் ஆனது எப்படி?

image

இந்திய குடியுரிமையை பெறும் முன், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சோனியா காந்திக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1983-ல் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால், 1980-ல் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக விகாஷ் திரிபாதி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக, டெல்லி போலீஸ் விளக்கம் அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!